மாவட்டத்தில் 205 இடங்களில் சிலைகள்
சிவகங்கை; விநாயகர் சதுர்த்தியையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 10 ஊர்களில் 205 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காளையார்கோவிலில் 14, திருப்புத்துார் 25, தேவகோட்டை 30, மானாமதுரை 10, திருப்புவனம், புழுதிபட்டியில் தலா ஒன்று, காரைக்குடியில் 52, புதுவயலில் 8, சிங்கம்புணரியில் 50, சிவகங்கையில் 14 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. ஆக.28ல் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கற்பக விநாயகர் கோயிலில் இருந்து தெப்பக்குளம் வரையும், திருப்புத்துார் சீரணி அரங்கில் இருந்து சங்கிலியாண்டி கோயில் ஊருணி வரையும், தேவகோட்டையில் அண்ணாதுரை அரங்கத்தில் இருந்து கருத்தா ஊருணி வரையிலும், மானாமதுரையில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அலங்காரகுளம் வரையும், திருப்புவனத்தில் நரிக்குடி விலக்கில் இருந்து தட்டான்குளம் வைகை ஆறு வரையும் ஊர்வலம் நடைபெறுகிறது. ஆக.29-ம் தேதி காரைக்குடி டி.டி. நகர் கற்பக விநாயகர் கோயிலில் இருந்து பருப்பூருணி வரையும், புதுவயலில் கட்டி பிள்ளையார் கோயிலில் இருந்து சாக்கோட்டை அக்னி பிள்ளையார் கோயில் ஊருணி வரையும், சிங்கம்புணரியில் ஐயப்பன் கோயிலில் இருந்து சேவுகமூர்த்தி கோயில் தெப்பம் வரையும், புழுதிபட்டியில் நாகமங்கலம் விநாயகர் கோயிலில் இருந்து வெள்ளைபள்ளம் ஊருணி வரையும் ஊர்வலம் நடைபெறுகிறது. சிவகங்கையில் ஆக.31-ம் தேதி சிவன் கோயில் இருந்து தெப்பக்குளம் வரை ஊர்வலம் நடைபெறுகிறது.