உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழுதாகி பாதியில் நின்ற டவுன் பஸ் மாணவர்கள், பொதுமக்கள் அவதி

பழுதாகி பாதியில் நின்ற டவுன் பஸ் மாணவர்கள், பொதுமக்கள் அவதி

காரைக்குடி : காரைக்குடி அருகே பலவான்குடியில், டவுன் பஸ் பழுதாகி பாதியில் நின்றதால் மாணவர்கள் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.காரைக்குடியில் இருந்து தினமும் காலை 6:00 மணிக்கு பள்ளத்தூருக்கு 6 ஏ டவுன்பஸ் செல்கிறது. காரைக்குடி பாண்டியன் நகர்,பேயன்பட்டி, சிறுவயல், பலவான்குடி, ஆத்தங்குடி சொக்கலிங்கம்புதூர் வழியாக பள்ளத்துார் வரை செல்லும்.மீண்டும் பள்ளத்துாரில் இருந்து புறப்பட்டு சொக்கலிங்கம்புதூர் ஆத்தங்குடி பலவான்குடி வழியாக காரைக்குடி வந்தடையும்.தினமும் 3 முறை பலவான்குடி வழியாக இந்த டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த டவுன் பஸ்சில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 8:30 மணிக்கு பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் பஸ்சில் சென்ற நிலையில் பஸ் பழுதாகி நின்றது. இதனால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மாணவர்களும், பயணிகளும் சிரமம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை