உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விளையாட்டு மைதானமின்றி மாணவர்கள் தவிப்பு

விளையாட்டு மைதானமின்றி மாணவர்கள் தவிப்பு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றிய கிராமங்களில் விளையாட்டு மைதானம் இல்லாமல் சிறுவர்கள் கண்மாய், ஊருணிகளில் விளையாடுகின்றனர். இதை தவிர்க்க போதிய அளவில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும். கிராமங்களில் பள்ளிகள்இருக்கும் அளவிற்கு விளையாடுவதற்கான விளையாட்டு மைதானங்கள் இல்லை. உடற்கட்டு, வலிமை இருந்தாலும் விளையாட்டுகளில் தேர்ச்சி பெற இன்றும் அதற்கான வசதி ஏற்படுத்தப்படவில்லை. கிராமங்களில் பெயரளவிற்கே ஊராட்சியினர் மைதானங்களை உருவாக்கி காட்சி பொருளாக்கியுள்ளனர். ஆனால் அதில் விளையாட போதிய வசதி இல்லை.இதனால் சிறுவர்கள்விளையாட பெரும்பாலும் வறண்ட ஊருணி, கண்மாய்களை தேர்வு செய்கின்றனர். அல்லது விழா கால பொட்டல்களில் விளையாடுகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் அதற்கான வாய்ப்பும் குறைவே. நவீன கால விளையாட்டுக்களை அங்கு விளையாட முடியாது. அரசு கல்வியின் வளர்ச்சிக்கேற்ப விளையாட்டு மைதானங்களையும் வருவாய் பிர்கா வாரியாக உருவாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை