உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறிவுசார் மையம் இல்லாமல் மாணவர்கள் அவதி

அறிவுசார் மையம் இல்லாமல் மாணவர்கள் அவதி

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அறிவு சார் மையம் இல்லாமல் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி.,, நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்காக தாலுகா தலைநரங்களில் அறிவுசார் மையங்கள் துவக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நூலகம், படிக்கும் அறை, பயிற்சி மையம், லாக்கர் உள்ளிட்ட வசதிகளுடன் போட்டித்தேர்வுகளுக்கான அனைத்து புத்தகங்களும் இருக்கும்.சிங்கம்புணரி தனித்தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 8 வருடங்கள் ஆகியும் என்னும் அறிவுசார் மையம் அமைக்கப்படவில்லை. இவ்வொன்றியத்தில் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. அருகேயுள்ள எஸ்.புதூர் ஒன்றியத்தில் மலைப்பகுதி கிராமங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதி மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்வதும், மேற்படிப்பு முடிந்து வேலைகளுக்கு செல்வதும் குறைந்து வருகிறது. போட்டி தேர்வுகளுக்கு தயாராக தேவையான புத்தகங்கள், வசதிகள் இவர்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. சிங்கம்புணரியில் அறிவுசார் மையம் அமைக்கப்படும் பட்சத்தில் இரு ஒன்றிய மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் கவனிப்பார்களா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை