உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்டுமான தொழிலாளர் வீடு கட்ட மானியம்; 102 வீடுகள் கட்ட அனுமதி  

கட்டுமான தொழிலாளர் வீடு கட்ட மானியம்; 102 வீடுகள் கட்ட அனுமதி  

சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நல வாரிய நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வீதம் இந்த ஆண்டு 102 வீடுகள் கட்டுவதற்கு நிதி வழங்கப்பட உள்ளது.சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்தின் கீழ் கட்டுமான தொழிலாளர் சங்கங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்கள் வீடு கட்டிக்கொள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து தலா வீட்டிற்கு ரூ.4 லட்சம் வரை வழங்கப்படுகிறது. முறையான பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள், தங்களது சொந்த இடத்தில் வீடு கட்டிக்கொள்ள வாரியமே தொழிலாளர் நல நிதியை அளிக்கிறது.சிவகங்கை மாவட்டத்தில் 102 வீடுகள் கட்டுவதற்கு தலா வீட்டிற்கு ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.தொழிலாளர் நல அதிகாரி கூறியதாவது: தமிழகத்திலேயே இந்த ஆண்டு சிவகங்கைக்கு தான் அதிக வீடுகள் கட்டிக்கொள்ள, கட்டுமான தொழிலாளர் நல நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.கட்டுமான தொழிலாளர்கள் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். உரிய பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால், வீடு கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படும். ஆனால் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமே வீடுகள் கட்டித்தரப்படும். வீட்டிற்கு தலா ரூ.4 லட்ச தொகையை அந்தந்த பி.டி.ஓ.,க்களிடம் வழங்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !