மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
15 hour(s) ago
பயிற்சி முகாம்
15 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
15 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
15 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
15 hour(s) ago
சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.புதுார் ஒன்றியத்தில் விவசாயமே மூல தொழிலாக அப்பகுதி மக்களுக்கு அமைந்துள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு விற்பனைக்கு வழங்க கரும்புகளை அதிகளவில் நடவு செய்துள்ளனர். மாவட்டத்தில் பருவம் தவறி மழை பெய்த நிலையில் இப்பகுதியில் கடந்த சித்திரை மாதத்தில் கரும்புகளை பயிரிட்டதால் தற்போது அவை செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இப்பகுதியில் வளர்க்கப் படும் கரும்புகளில் விவசாயிகள் ரசாயன உரங்களை சுத்தமாக பயன்படுத்தவில்லை.வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் சாணம், குப்பை மண் உள்ளிட்ட இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். இதனால் கரும்புகள் நன்கு வளர்ந்து, செழிப்பாக காட்சி அளிக்கிறது. பொங்கலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், வியாபாரிகள் அதிகளவில் கரும்புகளை வாங்கி செல்கின்றனர்.இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே கரும்புகளை பயிரிட்டுள்ளனர். பொங்கல் பண்டிகை நேரத்தில் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு பொன்னமராவதி, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளது.பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் நேரடியாக தோட்டங்களுக்கே வந்து கரும்புகளுக்கு முன் பணத்தை கொடுத்து சென்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago