உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்காணிப்பு அலுவலர்  ஆலோசனை கூட்டம் 

கண்காணிப்பு அலுவலர்  ஆலோசனை கூட்டம் 

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அலுவலரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். சமூக நலத்துறை இயக்குனர் சங்கீதா முன்னிலை வகித்தார். மானாமதுரை நகராட்சியில் ரூ.38.86 லட்சம் செலவில் வீட்டு குடிநீர் இணைப்பு பணிகள், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் செலவில் சாலை பணிகள், முதல்வரின் கிராம சாலை, கீழமேல்குடியில் ரூ.27.99 லட்சம் செலவில் நடக்கும் தார் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்தனர். இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், கலெக்டர் பி.ஏ.,க்கள் (பொது) முத்துக்கழுவன், (நிலம்) கீர்த்தனா மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை