உள்ளூர் செய்திகள்

தமிழ்சங்க விழா

சிவகங்கை: சிவகங்கை தமிழ்ச் சங்கம் சார்பில் 10ஆம் வகுப்பு பிளஸ் 2 வகுப்பில் தமிழ்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர் களுக்கும், நகரில் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை வைத்தவர்களுக்கும் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்ச்சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார். சேர்மன் துரை ஆனந்த், ராமநாதபுரம் சமஸ்தான பாபு சண்முகநாத சேதுபதி முன்னிலை வகித்தனர். கலெ க்டர் பொற்கொடி தமிழ்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார். மதுரை செந்தமிழ் கலைக்கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலெட்சுமி, தமிழ்ச்சங்கம் முன்னாள் தலைவர்கள் பகீரதநாச்சியப்பன், அன்புத்துரை, நிறுவனத்தலைவர் ஜவஹர் கிருஷ்ணன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி