தேசிய வங்கிகள் மூலம் நடப்பாண்டு ரூ.23,568 கோடி கடன் வழங்க இலக்கு
சிவகங்கை; சிவகங்கை மாவட்ட அளவில் தேசிய வங்கிகள் மூலம் விவசாயம், தொழில்துறை, இதர துறைகளுக்கு நடப்பாண்டு (2025--2026) ரூ.23 ஆயிரத்து 568 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வங்கிகளின் 2025 -- 2026ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் பொற்கொடி வெளியிட்டார். இதில், நடப்பு ஆண்டில் தேசிய வங்கிகள் மூலம் ரூ. 23 ஆயிரத்து 568 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். மாவட்ட அளவில் பல்வேறு திட்டங்கள், தொழில், விவசாயத்திற்கு ரூ.23 ஆயிரத்து 568 கோடி கடன் வழங்க உள்ளனர். விவசாயத்திற்கு மட்டுமே ரூ.16 ஆயிரத்து 201 கோடியும், தொழிற்துறைக்கு ரூ.1,438 கோடி, இதர முன்னுரிமை கடன்களாக பல்வேறு துறைகளுக்கு ரூ.5,927 கோடி வரை வழங்க திட்டமிட்டுள்ளனர். திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட ஐ.ஓ.பி., காரைக்குடி மண்டல மேலாளர் ஷஹ்ரேயர் பெற்றார். முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், ஆர்.பி.ஐ., மாவட்ட பொறுப்பாளர் அன்பரசு, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் அனிஷ்குமார், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் நித்யானந்தன், எச்.டி.எப்.சி., வங்கி மண்டல தலைவர் யோகமதி உட்பட வங்கி மேலாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.