உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டம் 

டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டம் 

சிவகங்கை : சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருமாறன் தலைமை வகித்தார். மாநில சம்மேளன துணை பொது செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் குமார், துணை தலைவர் மெய்யப்பன், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சேதுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டிப்பது. பணியிட மாறுதலில் பாரபட்சமாக செயல்படுகின்றனர். குடிமகன்கள் விரும்பாத மதுபானங்களை கடைகளுக்கு அனுப்பி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துகின்றனர். அரசு அனுமதியின்றி மதுபான பார்கள் செயல்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இக்கோரிக்கைகளை முன்வைத்து நவ., 13 அன்று கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில சம்மேளன பொது செயலாளர் திருச்செல்வம் கோரிக்கையை விளக்கி பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி