உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்

ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்

சிவகங்கை : தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்டத் தலைவர் சின்னச்சாமி, மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தனர். மாநிலத் தலைவர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட அமைப்புச் செயலாளராக செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணித் தலைவியாக ஆசிரியர் அனிதா, செயலாளராக திருப்புவனம் ஆசிரியர் லலிதா, செய்தித் தொடர்பாளராக ஆசைமணி, தணிக்கையாளராக உதயகுமார், தலைமையிடச் செயலாளராக திருமுருகன், திருப்புத்துார் கல்வி மாவட்டத் தலைவராக மாயக்கண்ணன், தேவகோட்டை கல்வி மாவட்டத் தலைவராக ஸ்டீபன் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.ஊக்க ஊதிய உயர்வு நிலை தொடர்ந்து பழைய முறைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி