உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாச்சியாபுரத்தில் டிச.5 ல் கோயில் கும்பாபிஷேகம்

நாச்சியாபுரத்தில் டிச.5 ல் கோயில் கும்பாபிஷேகம்

நாச்சியாபுரம்; திருப்புத்துார் அருகே நாச்சியாபுரம் காட்டு நாச்சியம்மன் கோயில் கும்பாபிேஷகம் டிச.5ல் நடைபெறுகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அண்மையில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு டிச.2 மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. டிச.3 மாலை முதற்கால யாகபூஜை,டிச.4 காலையில் இரண்டாம், மாலையில் மூன்றாம் காலை யாக பூஜை நடைபெறும். டிச.5 காலை 7:35 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் துவங்கி காலை 9:30 மணிக்கு மேல் காலை 10:40 மணிக்குள் கும்பாபிேஷகம் நடைபெறும்.ஏற்பாட்டினை சமஸ்தான மேலாளர் பா.இளங்கோ, கண்காணிப்பாளர் ஏ.சரவணன், சிறாவயல், நாச்சியாபுரம் நாட்டார்கள், நகரத்தார்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை