தேவகோட்டை கோயில்களில் தைப்பூச பூஜை
தேவகோட்டை : தேவகோட்டை ராம்நகர் பாலமுருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. தண்டாயுதபாணி மலைக்கோவிலில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். தி.ராம. சாமி கோவிலில் வேலிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.நித்தியகல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் முத்துக்குமாரசுவாமிக்கும், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கும் ஹோமம் அபிஷேகம் பாராயணத்தை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன. கைலாசநாதபுரம் முருகன் கோவில், பழனியாண்டவர் கோவில், வேல்முருகன் கோவில் உட்பட முருகன் கோவில்களிலும், மற்ற கோயில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றன.