உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு மார்ச் முதல் வாரத்தில் தொடக்கம்

கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு மார்ச் முதல் வாரத்தில் தொடக்கம்

கீழடி : கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 10ம் கட்ட அகழாய்வு மார்ச் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது.கீழடியில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வு பணியில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்கள், பயன்படுத்திய பொருட்கள், குறியீடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. மூன்று கட்ட அகழாய்விற்கு பின் தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் இதுவரை ஆறு கட்ட அகழாய்வு முடிந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் மாதத்துடன் அகழாய்வு பணி நிறைவு பெறும், கடந்தாண்டு அருங்காட்சியக பணி நடந்ததால் அகழாய்வு பணி தாமதமாக தொடங்கியதுடன் ஸ்படிக எடைக்கல், பாம்பு உருவ சுடுமண் பொம்மை உள்ளிட்ட 837 பொருட்கள் மட்டுமே கண்டறியப்பட்டன. 10ம் கட்ட அகழாய்வு இந்தாண்டு ஜனவரியிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வரை தொடங்கப்பட இல்லை.நிதி ஒதுக்கப்பட்டும் இன்னமும் பணி தொடங்கப்படாத நிலையில் வரும் மார்ச் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச்சில் தொடங்கி செப்டம்பர் வரை கீழடி, கொந்தகை ஆகிய இரு தளங்களில் மட்டும் அகழாய்வு பணிகள் நடைபெறும் என தெரிகிறது. கீழடியில் ஏற்கனவே எட்டு மற்றும் ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்த இடத்தின் அருகே மீண்டும் பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்