உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை வாரச்சந்தை திறந்து நான்கு வாரமாச்சு நடைபாதையில் தான் காய்கறி விற்பனை ஜோர் ஆய்வு செய்ய கூட வராத மாவட்ட அதிகாரிகள்

சிவகங்கை வாரச்சந்தை திறந்து நான்கு வாரமாச்சு நடைபாதையில் தான் காய்கறி விற்பனை ஜோர் ஆய்வு செய்ய கூட வராத மாவட்ட அதிகாரிகள்

சிவகங்கை, : சிவகங்கை வாரச்சந்தையில் ஒதுக்கப்பட்ட கடைகளை விடுத்து நடைபாதையில் காய்கறி விற்பனை நடப்பதால் சந்தைக்குள் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.சிவகங்கையில் ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தில் வாரச்சந்தை புதுப்பிக்கப்பட்டது. சந்தை வளாகத்தில் 4 கூரைகளுடன் 172 காய்கறிகடைகள், 12 மீன் கடைகள், 1 காவலர் அறை, ஆண், பெண் கழிப்பறை, பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு கட்டடப் பணி முடிக்கப்பட்டுள்ளது. சந்தை கட்டடம் செப்.18 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. சந்தைக்கு வரும் வியாபாரிகள் காய்கறி விற்க ஒதுக்கப்பட்ட இடத்தில் கடை வைக்காமல் நடைபாதையில் விற்பனை செய்கின்றனர். சிலர் ஒதுக்கப்பட்ட இடத்தில் காய்கறி மூடைகளை வைத்துக்கொள்கின்றனர். சந்தைக்குள் நடந்து சென்று பொருட்கள் வாங்க சிரமப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் வியாபாரம் செய்கிறோம். கடையின் மேல் பகுதியில் காய்கறிகள் அனைத்தையும் பரப்ப முடியாது. என்றனர்.சந்தை ஒப்பந்ததாரர் தரப்பு கூறுகையில், சந்தையில் 172 கடைகள் தான் உள்ளது. வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அனைவருக்கும் சந்தையில் இடம் கொடுக்க வேண்டும். மக்கள் நடந்து சென்று காய்கறி வாங்குவதில் எந்த தொந்தரவும் இல்லை என்றார்.திறக்கப்பட்டு நான்கு வாரங்களாகியும் புதிய சந்தை வளாகம் எப்படி செயல்படுகிறது. மக்களுக்கு வசதியாக உள்ளதா என்பதை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை