மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை
07-Aug-2024
இரண்டு மாதமாகியும் சீருடை வழங்கல!
02-Aug-2024
சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவில் விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளிகளால் மாணவர்களின் எதிர்கால பதக்க வாய்ப்பு இப்போதே பறிபோவதாக விளையாட்டு ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.மாநிலத்தில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு மண்டல, மாவட்ட, மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். மாநில அளவில் முதலிடம் பிடிப்பவர்கள் தேசிய போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இது தேசிய அளவில் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஒரு நடைமுறையாக உள்ளது. ஆனால் வட்டார அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் மாணவர்களை பங்கேற்க செய்ய பல பள்ளிகள் ஆர்வம் காட்டாததால் அம்மாணவர்களின் எதிர்கால பதக்க வாய்ப்பு பள்ளிகளிலேயே பறிபோகிறது.சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களைச் சேர்ந்த நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஆனால் இரு ஒன்றியங்களிலும் மாணவர்கள் விளையாட தயாராக இருந்தும் பல பள்ளிகள் போட்டியில் பங்கேற்கவில்லை. இதற்காக ஆசிரியர்கள் கூறும் காரணம் எதுவாக இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளும் அளவில் இல்லை.எஸ்.புதுார் ஒன்றியத்தில் ஓரிரு பள்ளிகளை தவிர்த்து பெரும்பாலான பள்ளிகள் குறிப்பாக அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் இப்போட்டியில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டன. சிங்கம்புணரி ஒன்றியத்திலும் சில பள்ளிகள் மாணவர்கள் தயாராக இருந்தும் போட்டிக்கு அழைத்து வரவில்லை. மாணவர்கள் வந்து செல்ல துாரம், போக்குவரத்து வசதி, ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களை அழைத்துவரவில்லை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அதிகாரிகளிடம் உரிய ஆலோசனைகளை பெற்று மாணவர்களை போட்டியில் பங்கேற்க செய்வது தான் சிறந்ததாக இருந்திருக்கும். இதனால் பல மாணவர்களின் விளையாட்டு கனவு கலைந்து, தேசம் நல்ல விளையாட்டு வீரர்களை இழக்கும் அவலம் ஏற்படுகிறது. இனி வரும் காலங்களில் அனைத்து பள்ளிகளும் கட்டாயம் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பை உறுதி செய்வதுடன், ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தது ஒரு ஆசிரியர் வீதம் விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல கல்வி அதிகாரிகள் நியமிக்க வேண்டும். எதிர்காலத்தில் போட்டிகளுக்கான வீரர்கள் கண்டெடுக்கப்படாமல் தொடக்க நடுநிலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களாய் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். வருங்கால பதக்க பட்டியலில் இந்தியா முன்னேற வேண்டும் என்றால் கடுமையாக நடவடிக்கை வேண்டும்.
07-Aug-2024
02-Aug-2024