உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வைகையில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம்

வைகையில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம்

திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் வீசப்பட்டதையடுத்து ஆற்றை கண்காணிக்க போலீசார் சி.சி.டி.வி., கேமரா பொருத்தியுள்ளனர். திருப்புவனம் வைகை ஆற்றில் ஆகஸ்ட் 29ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மிதந்தன. தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் வைகை ஆற்று மேம்பாலத்தில் இரு புறமும் சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். சி.சி.டி.வி., கேமராக்கள் திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனுடன் இணைக்கப்பட்டுள்ளது. போலீசார் ஸ்டேசனில் இருந்தபடியே வைகை ஆறு மற்றும் பாலத்தில் சென்று வருபவர்களை கண்காணிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை