உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நடப்பு ஆண்டு குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

நடப்பு ஆண்டு குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

இது வரை இம்மாவட்டத்தில் நடந்த பிரசவத்தின் போதும், அதற்கு பின்னர் 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் என 43 பேர் இறந்துள்ளனர். கடந்த 2022- 2023 ம் ஆண்டில் எடை குறைவாக பிறந்த குழந்தைகள் சதவீதம் 12.2 ஆக இருந்தது. குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 216 ஆக உயர்ந்து காணப் பட்டது. 2023--2024 ம் ஆண்டில் எடை குறைவாக பிறந்த குழந்தை சதவீதம் 8.9 ஆக இருந்த நிலையில், பிரசவ நேர, 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு 152 ஆக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

பிரசவ கால பெண்கள் இறப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மகப்பேறு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்த பிரசவத்தில், 2024--2025 ம் ஆண்டில் இது வரை 4,787 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில், பிரசவ கால பெண்களின் இறப்பு எண்ணிக்கை 4 ஆக உள்ளது.அதே நேரம் 2022- - 2023ம் ஆண்டில் 16,667 குழந்தைகள் பிறந்ததில், 7 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர். 2023--2024 ம் ஆண்டில் 16,210 குழந்தைகள் பிறந்த நிலையில், 8 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர்.

குறையும் குழந்தை திருமணம்

மாவட்ட அளவில் 2024--2025 ம் ஆண்டில் இது வரை 47 குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதற்காக 12 வழக்குகள் பதிந்துள்ளனர். வயது 18க்கு உட்பட்ட சிறுமிகள் 23 பேரும், 2022--2023ம் ஆண்டில் 33 சிறுமிகளும் கர்ப்பம் அடைந்துள்ளனர். 2022--23ல் 80 பேருக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. அதே போன்று 2023--2024ல் 73 சிறுமிகள் கர்ப்பம் அடைந்தும், 55 குழந்தை திருமணம் நடந்துள்ளது. கடந்த 2 ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு குழந்தை திருமண எண்ணிக்கை குறைந்துள்ளது.

காப்பீடு மூலம் ரூ.28 கோடி வருவாய்

சிவகங்கை மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் காப்பீடு திட்ட வருவாய் ஈட்டியுள்ளனர்.இத்திட்டம் மூலம் ஆப்பரேஷன், பிளாஸ்டிக் சர்ஜரி, புற்றுநோய் சிகிச்சை, டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சை மூலம் 4,625 நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். இதன் மூலம் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட நிதியாக மாவட்ட நிர்வாகத்திற்குரூ.28.17 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ