மேலும் செய்திகள்
வாரச்சந்தையில் கூடுதலாக அமைக்கப்பட்ட மின்விளக்கு
06-Sep-2025
மானாமதுரை: மானாமதுரையில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பஸ்கள் ஓடாத காரணத்தினால் வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகை தந்து பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டதை ஒட்டி மானாமதுரை பகுதியில் பெரும்பாலான பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் ஓடாத காரணத்தினால் கிராம பகுதிகளிலிருந்து மக்கள் மானாமதுரை வாரச்சந்தைக்கு வர முடியாமல் காலை முதல் மாலை வரை வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. போதிய வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.
06-Sep-2025