உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரதமர் வீடு திட்டத்தில் நிதி கேட்டு கலெக்டர் முன் மயங்கி விழுந்த பெண்

பிரதமர் வீடு திட்டத்தில் நிதி கேட்டு கலெக்டர் முன் மயங்கி விழுந்த பெண்

சிவகங்கை, : பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளிக்க வந்த தமிழ்செல்வி 50, கலெக்டர் முன் மயங்கி விழுந்தார். சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி அருகே துவக்கனேந்தல் ராமகிருஷ்ணன் மனைவி தமிழ்செல்வி 50. இவரது கணவர், சென்னையில் கூலி வேலை செய்கிறார். வருமானமின்றி தவிக்கும் பெண், இவரது தந்தை மூலம் கிடைத்த நிலத்தில் வீடு கட்ட திட்டமிட்டார். இதற்காக நிதியின்றி தவித்தவர், நேற்று காலை 11:00 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டரிடம், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டு மனு அளிக்க வந்தார்.கலெக்டர் குறைதீர் கூட்ட அறையில் வரிசையில் சென்ற தமிழ்செல்வி, கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்த அடுத்தபடியே திடீரென மயக்கமடைந்து, கீழே விழுந்தார். இதில், அவரது பின் தலையில் காயம் ஏற்பட்டது. அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், வீட்டிற்கு சென்றார். அவரது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மனுவை பரிந்துரை செய்தார். தமிழ்செல்வி கூறியதாவது: அடிக்கடி வலிப்பு வரும். நேற்று மாத்திரை சாப்பிட்டு விட்டுத்தான் வந்தேன். குடியிருக்க வீடு இன்றி மனஉளைச்சலில் கலெக்டரிடம் பிரதமரின் வீடு திட்டத்தில் நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தேன். அப்போது எனக்கு வலிப்பு ஏற்பட்டதில், மயங்கி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ