உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரான்மலையில் தீர்த்தவாரி

பிரான்மலையில் தீர்த்தவாரி

பிரான்மலை : சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் தீர்த்தவாரி நடந்தது. இக்கோயிலின் சித்திரைத் திருவிழா மே 1ல் தொடங்கியது. 10 நாள் மண்டபடியாக தினமும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மே 5ல் திருக்கல்யாணம், மே 9 ல் சித்திரை தேரோட்டம் நடந்தது. 10ம் நாளான நேற்று தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. மண்டகப்படியில் இருந்து சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி குளத்திற்கு முன் எழுந்தருளினர். சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை