திருக்குறள் வினாடி-வினா
சிவகங்கை: சிவகங்கையில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி டிச.,21ல் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி, 25 ஆண்டு வெள்ளிவிழாவை கொண்டாடும் விதமாக, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாநில அளவிலானதிருக்குறள் வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டி டிச.,21ல் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் கல்வித்துறை அரங்கில் மதியம் 2:00 மணிக்கு நடக்கும். மாவட்ட அளவில் உள்ள அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள்,பள்ளி, கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர், பேராசிரியர்கள் பங்கேற்கலாம். டிச., 20 அன்று மாலை 5:00 மணிக்குள் https://shorturl.at/wu06h என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.