உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துப்புரவு ஆய்வாளர் இல்லாத திருப்புவனம் பேரூராட்சி

துப்புரவு ஆய்வாளர் இல்லாத திருப்புவனம் பேரூராட்சி

திருப்புவனம் : திருப்புவனம் பேரூராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் பேரூராட்சிகள் பல நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக பேரூராட்சியாக இருந்தாலும் தேவைப்படும் பணியிடங்கள் இல்லை.இந்த பேரூராட்சியில் 18 வார்டுகளில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். திருப்புவனம் பேரூராட்சியில் இரண்டு மேஸ்திரிகள், 24 துாய்மை பணியாளர்கள், 80 தற்காலிக பணியாளர்கள் பணியில் உள்ளனர். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் வருடத்திற்கு 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.பேரூராட்சியில் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்று பதிவது உள்ளிட்ட பணிகளை பேரூராட்சி ஊழியர்களே மேற்கொள்கின்றனர். விசாரணைக்கு யாரும் போவதில்லை. துப்புரவு ஆய்வாளர் நியமிக்கப்பட்டால் உரிய விசாரணை நடத்தி சான்று வழங்க முடியும். திருப்புவனம் நகரில் பத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா, தொற்று நோய் ஏதும் ஏற்படுகிறதா உள்ளிட்ட சோதனை நடத்தப்பட வேண்டும், நடைமுறையில் துப்புரவு ஆய்வாளர் இல்லாததால் சோதனை ஏதும் நடத்தப்படுவதில்லை. மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் துப்புரவு ஆய்வாளர் பணியிடத்தை உருவாக்கி அதில் ஆய்வாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ