உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி கோயில் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

இளையான்குடி கோயில் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

இளையான்குடி: இளையான்குடி வாள் மேல் நடந்த அம்மன் கோயிலில் நடந்த நவராத்திரி விழாவில் மகிஷாசூரனை அம்மன் அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த மாதம் 23ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு விஜயதசமியை முன்னிட்டு கோயில் முன்பாக உள்ள மகர் நோன்பு பொட்டலில் மகிஷாசூரனை வதம் செய்வதற்காக குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் அம்பு எய்து வதம் செய்தார். பின்னர் அம்மனுக்கு அபிஷேக,ஆராதனை, பூஜை நடைபெற்று காப்பு களையப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை