பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டே ஷனில் விசாரணை மேற்கொண்ட பெண் இன்ஸ்பெக்டர் செல்வியை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்த ஸ்டேஷனில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக இரு தரப்பினரும் நேற்று வந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை செய்த போது இரு தரப்பினரும் தக ராறில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், இரு தரப் பினரையும் சமாதானப்படுத்தி விலக்க முயன்ற னர். அப்போது அக் கும்பல் இன்ஸ்பெக்டர், போலீசாரை அவதுாறாக பேசி கீழே தள்ளிவிட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இன்ஸ்பெக்டர் செல்வி புகாரின்படி போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜா 43, ஐயப்பன் 45, விஜயன் 42, காரைக்குடி முருகேசன் 40, விக்னேஷ் 33, அழகேசன் 38, ஆகியோரை கைது செய்தனர்.