உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்சோவில் மூவர் கைது

போக்சோவில் மூவர் கைது

தேவகோட்டை; தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தில் தனது பேத்திகளிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாத்தாவை போலீசார் கைது செய்தனர். * காளையார்கோவில் வேலடிதம்மம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து என்ற அஜீத்குமார் 24, இவர் தேவகோட்டையில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நெருங்கி பழகியதில் சிறுமி கர்ப்பமானார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி கொத்தனார் அஜீத் குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார். * வேலாயுதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் 19, அதே ஊரில் மெக்கானிக் வேலை செய்கிறார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது பெண்ணுடன் பழகிய நிலையில் பெண் கர்ப்பமானார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி முருகனை கைது செய்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை