உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மும்மொழிக் கொள்கை குறித்து பொய் பிரசாரம்

மும்மொழிக் கொள்கை குறித்து பொய் பிரசாரம்

சிவகங்கை : தமிழகத்தில் முதல்வரும் துணை முதல்வரும் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து மக்களிடம் பொய் பிரசாரம் செய்கின்றனர் என சிவகங்கையில் பா.ஜ., மாநில செயலாளர் சூர்யா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழக அரசிடம் எந்த திட்டத்திலும் தொலைநோக்கு பார்வை கிடையாது. மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும் அதனை செயல்படுத்துவதாகவும் தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவும் கல்வித்துறை அதிகாரிகளும் ஒப்புதல் கடிதம் எழுதியதால் 6000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது அத்திட்டத்தில் பகுதியை மட்டும் செயல்படுத்தி விட்டு அதற்கு மட்டும் பணம் கொடுப்பதற்கு எந்த சட்டத்திலும் இடம் கிடையாது. இந்த விஷயத்தில் தி.மு.க.,வினர் மக்களை ஏமாற்றும் வேலையை செய்து வருகின்றனர்.முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளியில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் அரசுப் பள்ளியில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுகின்றனர். இதில் யார் ஹிந்தியை திணிப்பது என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும்.அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலாக எடுப்போம் என அண்ணாமலை கூறியதன் அர்த்தம் தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தை மக்களிடத்தில் எடுத்துக் கூறி 2026ம் ஆண்டில் தி.மு.க.,வை ஆட்சிக்கு வராமல் செய்வது தான். புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என்று எங்கும் சொல்லவில்லை. சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தியா முழுவதும் ஹிந்தியை கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான நிதியை ஒதுக்க தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார். அன்று பேசியது தவறு என்று சிதம்பரம் இன்று மன்னிப்பு கேட்பாரா.55 ஆண்டுகளாக தமிழக மக்களை தி.மு.க., ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. அது 2026ல் நடக்காது. அதற்கு பா.ஜ., விடாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை