மேலும் செய்திகள்
அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
08-Sep-2025
சிவகங்கை; சிவகங்கையில் மாமனை கொலை செய்த மைத்துனர்,அவரது நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மதுரை மாவட்டம் பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாயக்கண்ணன் 32. இவரது மனைவி அன்னமணி. ஒரு மகனும், மகளும் உள்ளனர். அன்னமணியின் சகோதரர் அய்யனார் 30. மாயக்கண்ணன் மற்றும் அய்யனாருக்கு சொத்து பிரச்னை இருந்தது. 2010 மே 16ல் கொந்தகை கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு மாயக்கண்ணன் வந்தார். அவரை அய்யனார் மற்றும் அவரது நண்பர்கள் நாகேந்திரன் 35, ராமர் 30 வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.அன்னமணி திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அய்யனார், நாகேந்திரன், ராமர் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.3700 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.
08-Sep-2025