உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் -= மதுரை நேரடி அரசு பஸ் தேவை.. தீர்வு கிடைக்குமா

திருப்புத்துார் -= மதுரை நேரடி அரசு பஸ் தேவை.. தீர்வு கிடைக்குமா

திருப்புத்துார் நகர் தென் மாவட்டங்களையும் வடக்கு,மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் ஒரு போக்குவரத்து மையமாகும். 40 ஆண்டுகளுக்கு முன்பு திருப்புத்துார் வழியாகவே தொலை துாரம் செல்லும் அப்போதைய திருவள்ளுவர் கழக பஸ்கள் அதிகமாக இயக்கப்பட்டன.திருவனந்தபுரம், தளி, மார்த்தாண்டம்,தூத்துக்குடி, திருநெல்வேலி,சிவகாசி,கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கடலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி செல்லும் பஸ்கள் அதிகமாக இயக்கப்பட்டன. தற்போது இது போன்ற தொலைதுார பஸ்கள் திருப்புத்துார் வழியாக செல்வது வெகுவாக குறைந்து விட்டது. முக்கிய நகர்களுக்கு இடையே போக்குவரத்துக்கு நேரடி வழியாக இருந்தாலும் திருப்புத்துார் வழியாக தொலைதுார வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கு கிடைத்த பஸ் வசதியும் குறைந்தது.இதனால் முகூர்த்த காலங்கள், விழாக்காலம், விடுமுறை நேரங்களில் வெளியூர்களிலிலிருந்து வரும் போதும், வெளியூர்களுக்கு செல்லும் போதும் இருக்கை கிடைக்காமல் திருப்புத்துார் பயணிகள் நின்று கொண்டே பயணம் செல்ல வேண்டியுள்ளது. முதியவர்கள்,நோயாளிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக மதுரையிலிருந்து வரும் திருப்புத்துார் பயணிகளுக்கு தனியார் பஸ்களிலும், சில அரசு பஸ்களிலும் இருக்கையில் அமர அனுமதி மறுக்கப்படுகிறது. பஸ் இருக்கைகள் நிரம்பிய பின்னரே திருப்புத்துார் பயணிகள் தனியார் பஸ்களில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.இதைப் பார்த்து அரசு பஸ்களிலும் இதை கடைபிடிக்க முயல்கின்றனர். பாதிக்கப்பட்ட பயணிகள் பல முறை போராடியும், அதிகாரிகள் பஸ் பணியாளருக்கு பல முறை உத்தரவிட்டும் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.' முதலில் வரும் பயணியருக்கு டிக்கெட்' என்ற போக்குவரத்து விதியை மீறும் பஸ் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்களின் உரிமம் தற்காலிக நிறுத்தமோ, அபராதமோ விதிப்பதில்லை. எச்சரித்து அனுப்புவதுடன் நிறுத்தப்படுகிறது.இதனால் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் இதே போன்று புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட், காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டிலும் திருப்புத்துார் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கு நிரந்தர தீர்வு காண பயணிகள் கோரியுள்ளனர். மாற்றாக திருப்புத்துாரிலிருந்து மதுரைக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்த வேண்டியுள்ளனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் மதுரைக்கு பஸ்கள் இயக்குவதால் பயணிகளுக்கு இருக்கை வசதி உறுதி செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ