உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் சந்தையில் தக்காளி விலை சரிவு

திருப்புவனம் சந்தையில் தக்காளி விலை சரிவு

திருப்புவனம்: திருப்புவனம் சந்தையில் தக்காளிவிலை கிலோ ரூ.40 வரை குறைந்ததால், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் அல்லிநகரம், பழையனூர், சங்கங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விவசாயம் செய்யப்பட்டது. நாட்டுத் தக்காளிகள் அளவில் சிறியதாக இருந்தாலும் காரத்தன்மை மிக்கது. ரசம், சட்னி வகைகளுக்கு மிகவும் சிறந்தவை. தக்காளி விதைகளை வைத்து நாற்றங்கால் அமைத்து அதன்பின் பறித்து வயல்களில் நடவு செய்ய வேண்டும். குறைந்த அளவு தண்ணீர் தேவை, பராமரிப்பு செலவும் குறைவு, தினசரி வருவாய் என்பதால் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு வந்தனர். பயிரிட்ட 70 நாட்களுக்கு பின் தினசரி தக்காளியை சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம். நெல் அறுவடை செய்த வயல்களில் அடுத்த நெல் பருவத்திற்கு முன்னதாக விவசாயிகள் கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்தவரங்காய் பயிரிடுவார்கள். ஆனால் தற்போது தக்காளி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சில விவசாயிகள் மட்டுமே ஊடுபயிராக தக்காளி பயிரிட்டுள்ளனர். கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு தக்காளி விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். இத்தக்காளி கிலோ ரூ.70 முதல் 80 வரை விற்கப்படுகின்றன. நேற்று திருப்புவனம் சந்தையில் பெரிய சைஸ் தக்காளி கிலோ ரூ.50, சிறிய அளவு தக்காளி கிலோரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டன. வியாபாரி மணிகண்டன் கூறியதாவது, சந்தைக்கு ஆயிரத்து 500 கிலோ வரை தக்காளி விற்பனை செய்வோம். கடந்த சந்தையின் போது கிலோ 80 ரூபாய் என்பதால் பொதுமக்கள் அவ்வளவாக வாங்கவில்லை. தற்போது விலை சற்று குறைந்துள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை