உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதுவயலில் நாளை நலம் காக்கும் முகாம் 

புதுவயலில் நாளை நலம் காக்கும் முகாம் 

சிவகங்கை: புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் (அக்., 25) நாளை 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: இம்முகாம் காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும். இம்முகாமில் ரத்த பரி சோதனை, இ.சி.ஜி., போன்ற மருத்துவ பரி சோதனை இலவசமாக வழங்கப்படும். கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல், எலும்பு, நரம்பியல், மனநலம், சர்க்கரை நோய், நுரையீரல், இதய மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் உட்பட 17 வகையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். டாக்டர்கள் பரிந்துரைபடி எக்கோ, எக்ஸ்ரே, கர்ப்ப பை, மார்பக புற்றுநோய் பரிசோதனை நடத்தப்படும். கர்ப்பிணிகளுக்கு சிறப்பு பரிசோதனை செய்யப்படும். முகாமில் மருத்துவ காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கார்டு, ஆதார், கிராம நிர்வாக அலுவலரிடம் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு குறைவாக இருப்பதாக சான்று பெற்று சமர்பிக்க வேண்டும். இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ