உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விடிவு பிறக்காத சுற்றுலா விடுதி

விடிவு பிறக்காத சுற்றுலா விடுதி

பிரான்மலை : பிரான்மலைக்கு 'விசிட்' அடித்த அமைச்சர்களால் விடிவு பிறக்குமா என்று எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் 5வது சிறப்பு பெற்றதும் பாரி ஆண்ட பறம்புமலை என்று போற்றப்படுவதுமான பிரான்மலைக்கு தினமும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகளுக்கு தங்கும் விடுதி, போக்குவரத்து வசதி, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட முறையான வசதிகள் இல்லை. இப்பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவித்து அனைத்து வசதிகளையும் செய்து தர இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அத்திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டு வந்தது. இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பிரான்மலை பகுதியில் ஆய்வு செய்தார். அவருடன் தொகுதி அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உடன் வந்தனர். அமைச்சர்கள் வருகையை தொடர்ந்து பாழடைந்து புதர் மண்டி கிடந்த சுற்றுலா விடுதி சுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. விடுதி மற்றும் பஸ் நிலையத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம், வேளார் ஊருணி ஆகியவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.பிரான்மலையில் ரூ. 58.61 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்களின் 'விசிட்'டால் விடிவு பிறக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை