உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே கேட்டில் டிராக்டர் மோதல்

ரயில்வே கேட்டில் டிராக்டர் மோதல்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பாப்பான்குளம் ரயில்வே கேட்டில் டிராக்டர் மோதியதில் கேட் சேதமடைந்தது. மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதை திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக செல்கிறது. இப்பாதையில் மணலுார், நரிக்குடி ரோடு, பிரமனுார் ரோடு, பாப்பான்குளம் உள்ளிட்ட இடங்களில் தானியங்கி ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் மூன்று மணிக்கு ரயில்வே கேட் மீது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில் கேட் சேதமடைந்தது. மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதால் டிராக்டர் மோதிய விபத்தில் மின்பாதையிலும் பாதிப்பு ஏற்பட்டது. மதுரையில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து பழுதை சரி செய்தனர். இதன்பின் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ