உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் மழை நீர் கால்வாய் உயரம் தண்ணீர் வர வாய்ப்பால் வியாபாரிகள் அதிர்ச்சி

காரைக்குடியில் மழை நீர் கால்வாய் உயரம் தண்ணீர் வர வாய்ப்பால் வியாபாரிகள் அதிர்ச்சி

காரைக்குடி: காரைக்குடி கல்லுக்கட்டி, அம்மன் சன்னதி பகுதிகளில் உயரமாக மழைநீர் கால்வாய் கட்டப்படுவதால், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள அம்மன் சன்னதி பகுதி கல்லுக்கட்டி சாலையாக உள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. மழை நீர் கால்வாய் பராமரிப்பின்றி கிடந்ததால் தண்ணீர் கடைகளுக்குள் புகுந்து பொருட்கள் வீணானது.மழைநீர் கால்வாய்களை தூர்வாரி புதிதாக கால்வாய் கட்டும் பணி பொதுப் பணித்துறை சார்பில் நடந்து வருகிறது.இவ்வாறு கட்டப்படும் கால்வாய்கள், சாலையை விட உயரம் கொண்டதாக இருப்பதால், கடைகள் பள்ளத்திற்குள் சென்றது.மழை பெய்தால் கடைக்குள் தண்ணீர் செல்வ வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.பொதுப்பணித்துறையினர் கூறுகையில்: உயரமாக கட்டப்பட்டால் தான், மழைநீர் எளிதாக கால்வாயில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும். மழைநீர் சாலையில் விழுந்து கால்வாய்க்குள் செல்ல முறையாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.வியாபாரிகள் கோரிக்கை விடுத்ததால் பிற பகுதியில் கட்டப்படும் மழை நீர் கால்வாய் சற்று குறைவான உயரத்தில் கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை