உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி தினசரி மார்க்கெட்டில் தேங்கிய மழைநீரால் வியாபாரிகள் அவதி

காரைக்குடி தினசரி மார்க்கெட்டில் தேங்கிய மழைநீரால் வியாபாரிகள் அவதி

காரைக்குடி: காரைக்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட தினசரி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.காரைக்குடி 100 அடி சாலையில் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. போதிய இட வசதி இல்லாத நிலையில், தற்போது காரைக்குடி கழனிவாசல் அருகே 70 க்கும் மேற்பட்ட கடைகளுடன் கூடிய, புதிய தினசரி மார்க்கெட் கட்டப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு மார்க்கெட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. குடிநீர் மின்விளக்கு உட்பட பல்வேறு வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள புதிய மார்க்கெட்டில், மழைநீர் செல்ல வழி இல்லை.சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் கடைகள் முன்பு மழை நீர் தேங்கியது. இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:மார்க்கெட்டில் உள்ள கடைகளின் மேல் புறத்தில் மழை நீர் வராத அளவிற்கு ஷெட் போடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில், சாரல் விழுந்து தண்ணீர் தேங்கி உள்ளது. உடனடியாக தண்ணீர் வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்காத வகையில் சரி செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ