உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்கம்பி அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மின்கம்பி அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

இளையான்குடி: இளையான்குடி - பரமக்குடி ரோட்டில் குமாரகுறிச்சி அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இளையான்குடி - பரமக்குடி ரோட்டில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இளையான்குடி துணை மின் நிலையத்தில் இருந்து உயரழுத்த மின் கம்பி மூலமாக மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு இவ்வழியாக சென்ற மின் கம்பி குமாரகுறிச்சி கிராமத்திற்கு அருகே இளையான்குடி, பரமக்குடி ரோட்டில் அறுந்து விழுந்தது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் சரி செய்த பிறகு போக்குவரத்து துவங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை