உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / படிக்கட்டில் மாணவர்கள் பயணம்; கண்டித்த டிராபிக் போலீசார்

படிக்கட்டில் மாணவர்கள் பயணம்; கண்டித்த டிராபிக் போலீசார்

காரைக்குடி; காரைக்குடி பஸ்களில் மாணவர்கள் படிகளில் பயணம் செய்வதை போக்குவரத்து போலீசார் தடுத்ததோடு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களை எச்சரிக்கை செய்தனர். காரைக்குடி அழகப்பா பல்கலை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பஸ்களில் வந்து செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லுாரிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. குறிப்பிட்ட பேருந்துகளே உள்ளன. இதனால், டவுன் பஸ்களில் கூட்டம் நிரம்பி, படிகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில், நேற்று காரைக்குடி ராஜிவ் காந்தி சிலை அருகே போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டனர். படிக்கட்டில் பயணம் செய்பவரை கண்டித்ததோடு, கூட்டமாக இருக்கும் பஸ்களில் மாணவ மாணவிகளை அனுப்பாமல், காத்திருந்து அடுத்த பஸ்சில் ஏறி செல்லும்படி அறிவுறுத்தினர். தவிர பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்களுக்கும் அறிவுரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி