உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காளையார் கோவிலுக்கு போக்குவரத்து போலீஸ் தேவை

 காளையார் கோவிலுக்கு போக்குவரத்து போலீஸ் தேவை

சிவகங்கை: காளையார்கோவிலில் மறவமங்கலம் - -- கல்லல் ரோடு சந்திப்பில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அங்கு போக்குவரத்து போலீசார் நியமிக்கவேண்டும். காளையார்கோவில் வழியாக மதுரை -- தொண்டி, காரைக்குடி -- பரமக்குடி இடையே பஸ் போக்குவரத்து அதிகளவில் உள்ளன. இங்கு வசிக்கும் ஆசிரியர், அரசு ஊழியர்கள் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டைக்கு பஸ், டூவீலர்களில் சென்று வருகின்றனர். இதனால் இந்நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நகரில் போலீஸ் ஸ்டேஷன் பஸ் ஸ்டாப், கல்லல் ரோடு விலக்கு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன. இதை தவிர்க்க நகருக்கு போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை