விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே துாதை கிராமத்தில் விவசாயிகளுக்கான மண்புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் விரிவாக்க சீரமைப்பு திட்டம் வட்டார வேளாண் அலுவலகம் மூலம் நடத்தப்பட்டது. முகாமில் வேளாண் உதவி இயக்குனர் மலர்விழி வேளாண் திட்டஙகள், நுன்ணீர் பாசனம் குறித்து விளக்கமளித்தார். மண்புழு உரம் தயாரிப்பு குறித்து ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் குணசேகரன் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். தொழில்நுட்ப மேலாளர் சத்யா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் நந்தினி, சண்முகப்பிரியா உள்ளிட்டோர் பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.