உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கடம் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி

கடம் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி

மானாமதுரை: மானாமதுரையில் இசை கருவியான கடம் தயாரிப்பதற்கு முதன் முறையாக பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கர்நாடக இசைக் கச்சேரிகளில் முக்கிய பங்கு வகிப்பது கடம் இசைக்கருவி . இந்த கருவி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பரம்பரை, பரம்பரையாக தயாரித்து வருகின்றனர். பிரபல இசை அமைப்பாளர்கள், கடம் இசை கலைஞர் விக்கு விநாயக்ராம், கடம் சுகன்யா உள்ளிட்ட பலரும் மானாமதுரையில் கடம் வாங்கி சென்றுள்ளனர். மானாமதுரையைச் சேர்ந்த ரமேஷ் குடும்பத்தினர் கடம் தயாரிப்பு பணியில் பரம்பரை,பரம்பரையாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது முதன் முறையாக தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் கடம் தயாரிப்பாளர் ரமேஷிடம் 20 பெண்களுக்கு பயிற்சி அளிக்க பூம்புகார் நிறுவனம் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தற்போது பெண்களுக்கு கடம் தயாரிக்க மண் கலவை, மண் பிசைவது, இயந்திரம் மற்றும் கையினால் தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை