மரக்கன்று நடும் விழா
சிவகங்கை: மாவட்டத்தில் உள்ள சிறை சாலைகளில் மரக்கன்றுகளை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி நட்டு வைத்தார்.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட அளவில் அரசு அலுவலகம், நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சக்கந்தியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளந்திரையன் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக சிவகங்கை, திருப்புத்துார் கிளை சிறைச்சாலை, காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலை வளாகங்களில் மரக்கன்றுகளை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி நட்டு வைத்தார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, சார்பு நீதிபதி ராதிகா, திறந்தவெளி சிறைச்சாலை கண்காணிப்பாளர் அருண்ராஜ், கிளை சிறை கண்காணிப்பாளர்கள் திருப்புத்துார் கோபால், சிவகங்கை பாலமுருகன் உட்பட தலைமை காவலர்கள், சிறை காவலர்கள் பங்கேற்றனர்.தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மரக்கன்று நடப்பட்டது. சார்பு நீதிபதி கலைநிலா தலைமையேற்று மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். மாவட்ட சட்ட பணிகள் குழு செயலாளர் நீதிபதி ராதிகா, மாஜிஸ்திரேட் மாரிமுத்து, மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரேமி, வக்கீல்கள் சங்க தலைவர் ஆண்டவர், செயலாளர் சொர்ண பிரகாஷ், பொருளாளர் முத்துக்குமார், மூத்த வக்கீல்கள் செல்லப்பா, ஜான்சிராணி பங்கேற்றனர். வட்ட சட்ட பணிகள் குழு முதுநிலை அலுவலர் மணிமேகலை, சட்ட தன்னார்வலர் வித்யா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.