அனுமதியில்லாத ரஸ்க் கம்பெனிக்கு சீல்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சையில் முறையாக அனுமதி பெறாமல் வீட்டில் செயல்பட்ட ரஸ்க் கம்பெனிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். செஞ்சை சண்முகா நகரில் வணிக பயன்பாடு என பதிவு செய்யாமல் வீட்டில் ரஸ்க் கம்பெனி செயல்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் 2018 ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் கமிஷனர் சங்கரன் தலைமையில் அதிகாரிகள் வணிகப் பயன்பாட்டுக்கு என அனுமதி பெறாமல் வீட்டில் வைத்து ரஸ்க் கம்பெனி செயல்பட்டதால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. குடியிருப்பு என அனுமதி வாங்கி வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். பலமுறை நோட்டீஸ் வழங்கியும் திருத்தி அமைக் கவில்லை. மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என எழுந்த புகாரின் பேரில், நோட்டீஸ் வழங்கி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.