நாய்களுக்கு தடுப்பூசி
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி யில் தெரு நாய்களை பிடித்து நகராட்சி ஊழியர்கள் கால்நடைத்துறை உதவியுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்ற னர். இதுவரை 591 நாய் களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். சிவகங்கையில் இதுவரை 641 தெருநாய்கள் கணக்கெடுக்கப்பட்டு 591 நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் நகரில் மாமிச கடைகளுக்கு முன்தோல் உரிந்த நிலையில் திரியும் நாய்களை நகரை விட்டு அப்புறப்படுத்தி அவைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.