உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வடமஞ்சுவிரட்டிற்கு  சிவகங்கையில் தனி கேலரி வடமஞ்சுவிரட்டு குழு மனு

 வடமஞ்சுவிரட்டிற்கு  சிவகங்கையில் தனி கேலரி வடமஞ்சுவிரட்டு குழு மனு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்திற்கென அரசு சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு கேலரி கட்டி கொடுக்க வேண்டும் என கலெக்டர் பொற்கொடியிடம் வடமாடு மஞ்சுவிரட்டு குழு மனு அளித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஜன., முதல் மே வரை உரிய அனுமதி பெற்று, அரசிதழில் பட்டியல் வெளியிட்டு கடந்த ஆண்டு 47 இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இது தவிர மாவட்ட அளவில் அனுமதியின்றியும் இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. போலீசார் விழாக்குழுவினர் மீது வழக்கு பதிந்து விடுகின்றனர். இந்த நிலையில் மாவட்ட தலைநகரில் வடமஞ்சுவிரட்டிற்கென தனியாக 'கேலரி' அமைத்து தர அரசு முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை