மேலும் செய்திகள்
வேளாண் அலுவலக கட்டடம் சேதம்
10-Oct-2024
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சேதமடைந்ததால் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஆர்.ஐ., வி.ஏ.ஓ., இருவரும் பணியாற்றி வருகின்றனர். திருப்பாச்சேத்தி பிர்க்காவில் திருப்பாச்சேத்தி, சலுப்பனோடை, பிச்சைப்பிள்ளையேந்தல், கானுார், கல்லுாரணி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றை உள்ளடங்கிய விவசாயிகள் அடங்கல், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக திருப்பாச்சேத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வருவது வழக்கம், திருப்பாச்சேத்தியில் படமாத்துார் ரோட்டில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு தனித்தனி அலுவலகம் உள்ளன. இதில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கடந்த சில வருடங்களுக்கு முன் இடிந்து சேதமடைந்தது. புதிய அலுவலகம் இன்று வரை கட்டப்படவில்லை. இதனால் வருவாய் ஆய்வாளர் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இந்த கட்டடமும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.கட்டடத்தின் உட்புற கூரை சிமென்ட் பூச்சு உதிர்ந்து கம்பி நீட்டிய வண்ணம் உள்ளது. மழை காலங்களில் அலுவலகம் முழுவதும் மழை நீர் கசிந்து தேங்குவது வழக்கம், இதனால் முக்கிய ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் வருவாய்த்துறையினர் தவிக்கின்றனர்.பழுதான கட்டடத்திற்கு பதில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10-Oct-2024