உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மே 12ல் வீர அழகர் ஆற்றில் இறங்குகிறார்

மே 12ல் வீர அழகர் ஆற்றில் இறங்குகிறார்

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில், வீர அழகர் கோயில்களில் வருடம் தோறும் சித்திரைத் திருவிழா 10 நாட்கள் நடை பெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான திருவிழா ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வரும் மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் மே8ம் தேதி, தேரோட்டம் மே 9ம் தேதி நடைபெற உள்ளது. மே 11ம் தேதி வீர அழகர் எதிர் சேவையும், வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் விழா மே 12ம் தேதியும் நடைபெற உள்ளது. விழாக்களின் போது சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் குதுாகலப்படுத்தும் வகையில் வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் ராட்டினங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை