உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தடுப்புச்சுவர் இல்லாத கால்வாயில் தவறி விழும் வாகனங்கள்

 தடுப்புச்சுவர் இல்லாத கால்வாயில் தவறி விழும் வாகனங்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் குடியிருப்பு பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாத ஆபத்தான கால்வாயில் வாகனங்கள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகிறது. அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் உள்ள வன்னிமகுந்தான் அணையில் இருந்து பெரியாறு நீட்டிப்புக் கால்வாய்க்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இணைப்புக் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. முறையாக திட்டமிடாததால் இக்கால்வாய் பயன்பாடு இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கிறது. மழைக்காலங்களில் கால்வாயில் தேங்கும் மழைநீர் குளம் போல் காட்சி யளிக்கிறது. 30 அடி ஆழமுள்ள இக்கால்வாயில் இருபுறமும் குடியிருப்புகள் வந்துள்ளன. தடுப்புச்சுவர் இல்லாததால் கால்வாய் கரை ரோடுகளில் செல்லும்போது வாகனங்கள் அடிக்கடி கவிழ்ந்து விபத்து நடக்கிறது. இதுவரை பலர் விழுந்து காயம் அடைந்துள்ளனர். எனவே கால்வாயை சீரமைத்து முழு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை