உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் குறைந்த மின்னழுத்தம் கிராம மக்கள் அவதி

திருப்புவனத்தில் குறைந்த மின்னழுத்தம் கிராம மக்கள் அவதி

திருப்புவனம்: திருப்புவனம் சுற்று வட்டார கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்களை இயக்க முடியவில்லை.மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வீடுகளில் மின்விசிறி, ஏசி., இல்லாமல் இருக்கவே முடியவில்லை.திருப்புவனம் அருகே மணலுார்,அகரம், மடப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் 10 நாட்களுக்கும் மேலாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.மணலுார் பொற்கோ கூறுகையில்: மணலுாரில் 10 நாட்களுக்கும் மேலாக குறைந்த மின்னழுத்தத்துடன் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் மோட்டார், ஏ.சி., பிரிஜ் உள்ளிட்ட எதனையும் இயக்க முடியவில்லை. மோட்டாரை இயக்க முடியாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறைந்த மின்னழுத்தத்தால் வீடுகளில் உள்ள பல்பு, மின்விசிறி, டி.வி.,க்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன, என்றார்.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்: திருப்புவனம் நெல்முடிகரை துணை மின்நிலையத்தில் நகர்ப்பகுதி, கிராமப்பகுதிகள் உள்ளிட்டவற்றிற்கு தனித்தனி டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்விநியோகம் நடைபெறுகிறது.இதில் கிராமப்புறங்களுக்கு செல்லும் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதால் கீழடி, அரசனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனாலேயே குறைந்த மின்னழுத்தம் நிலவுகிறது. டிரான்ஸ்பார்மர் பழுது பார்க்கும் பணி இன்று (ஏப்.30)டன் நிறைவு பெற்று மீண்டும் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

செயல்படாத புகார் எண்

சிவகங்கை: சிவகங்கை நகர் அருகில் உள்ளது ரோஸ் நகர், முல்லை நகர் பகுதி. இந்த பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீண்டும் காலை 6:30 மணிக்கு தான் வந்தது. புகாரை தெரிவிக்க மின்வாரிய புகார் எண் 1912 அழைத்தால் அது செயல்படவில்லை உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. பொது மக்கள் மின் தடை தொடர்பாக புகார் அளிக்க செயல்பாட்டில் உள்ள எண்ணை மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் விளம்பரப்படுத்த மின் வாரியத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை