உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விநாயகர் கோயில் பால்குட விழா

விநாயகர் கோயில் பால்குட விழா

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் விநாயகர் கோயில் பால்குட விழா நடந்தது. கட்டபொம்மன் தெரு விநாயகர் கோயிலில் தை உற்சவத்தை முன்னிட்டு 36 வது ஆண்டாக பால்குடம், அன்னதான விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு சந்தி விநாயகர் கோவிலில் இருந்து கட்டபொம்மன் தெரு விநாயகர் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். 9:00 மணிக்கு விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். தொடர்ந்து திருப்பணிக் குழு சார்பில் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !