உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வயிரவர் கோயிலில் விஷூ கனி தரிசனம்

வயிரவர் கோயிலில் விஷூ கனி தரிசனம்

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே நகர வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சித்திரை விஷூ கனி தரிசனம் நடந்தது. இக்கோயிலில் நேற்று காலை 6:30 மணிக்கு கோ, லட்சுமி பூஜை நடந்தது. அம்பாளுக்கு நாணயங்கள் வைத்து தன பூஜையும், வயிரவருக்கு கனி பூஜை நடந்தது. வயிரவர் சன்னதி முன் மா, பலா, வாழை கனிகள், தென்னம்பாலை, நெற்கதிர்கள்வைத்து தரிசனம் செய்தனர். ஐம்பெரும் சுவாமிகளுக்கு அபிேஷகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கேடக வாகனத்தில் வெள்ளிக்கவசத்துடன் சுவாமி பிரகார வீதி உலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை